ஓரெழுத்துப் பிழையிலே
ஓய்ந்த நீங்கள் பாண்டியன்
ஓயாமல் பிழைக்கிறோம்
நாங்களோ ஏழு கோடியன்
கொள்ளையடித்த தமிழையே
கொன்று நாம் பார்க்கிறோம்
வெள்ளையடித்த நம்மையே
கொள்ளி வைத்துக்
- கொள்கிறோம்
கீழடி புதுமைதான் என்ன - பல
கிறுக்கலின் பெயர்கள்தான் -என்ன
கிளரிடும் உண்மைதான் என்ன -- அவை
கிடைத்தும் தவிக்கிறாய் நீ
தமிழனாயென்ன
பாதியில் அழிந்தது பழமைத்தமிழ்
வியாதியில் அழுகுது -இனியத்தமிழ்
பெயரிலே சிறக்குது புதியத்தமிழ்
பிறவியில் குலைந்தது -அழகுத்தமிழ்
அந்திவானின் அழகே தமிழ் - உனை
அழகாய் சுரக்கும் என் உமிழ்
அன்புமொழிக்காய் வருவேன் திகில் - ஒரு
அன்னியனாய் எழுவேன் நீ மகிழ்
வீரம் கொண்ட நாம்தான் - நேற்று
விரியன் பாம்பாய் போனோம்
மீதம் உள்ள நாம்தான் - இனி
நீரின் ஊற்றாய் வாழ்வோம்....
தமிழ் வாழ்க!!
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
ReplyDeleteSuper.
ReplyDelete